மூன்றே நாட்களில் பெருங்குடலை சுத்தமாக்கும் சாலட்!

பெருங்குடல் (Large intestine) என்பது முதுகெலும்புள்ள உயிரினங்களின் செரிமான அமைப்பின் கடைசி பகுதியாகும்.

மொத்தத்தில் மனிதர்களின் பெருங்குடல் சுமார் 1.5 மீட்டர் (5 அடி) நீளமுடையது ஆகும். குடலிறக்கப்பாதையின் மொத்த நீளத்தில் இது ஐந்தில் ஒரு பங்கு ஆகும்.

ஒருவருக்கு குடல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம். இத்தகைய குடல் ஒட்டுண்ணிகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடியது. இதனால் பெருங்குடல் போன்ற அனைத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

இதற்கு நாள்கணக்காக மருந்துகள் போட தேவையில்லை. இயற்கை முறையிலே நாம் பெருங்குடலை எளிதில் சுத்தப்படுத்த முடியும். மூன்றே நாட்களில் பெருங்குடலை முழுமையாக சுத்தம் செய்ய உதவும் சாலட் பற்றி இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்
  • முட்டைக்கோஸ்
  • பீட்ரூட்
  • கேரட்
  • எலுமிச்சை சாறு
  • ஆலிவ் எண்ணெய்
செய்முறை

முட்டைகோஸ் மூன்று பங்கு, பீட்ரூட் ஒரு பங்கு, கேரட் ஒரு பங்கு, தேவையான அளவு உப்பு மற்றும் கொஞ்சம் நீர் இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து அதன் மேல் எலுமிச்சை சாறு பிழிந்து கலக்கவும்.

பின் கலக்கிய பிறகு சிறிதளவு ஆலிவ் எண்ணெய்யை அதன் மேல் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.

இந்த சாலடை நீங்கள் தொடர்ந்து மூன்று நாள் உட்கொண்டு வந்தால் இது உடலின் பி.எச் அளவை சமநிலைப்படுத்தி பெருங்குடல் சுத்தமாகவும், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறவும் வழிவகுக்கும்.

நன்மைகள்

இந்த சாலட் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, மினரல் சத்துக்கள் மற்றும் வைட்டமின் சத்துக்கள் கிடைக்கின்றன.

இந்த சாலட் மூலம் உங்களுக்கு கிடைக்கும் சத்துக்கள் செரிமான மண்டலத்தின் செயற்திறன் சிறக்க உதவுகிறது. இதன் மூலமாக உண்டல் பெருங்குடல் இயக்கம் சீராகி, உடலில் உள்ள நச்சுக்கள் வேகமாக வெளியேற்றப்படும்.