நடிகை பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனாஸின் 4வது திருமண வரவேற்பு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்க உள்ள நிலையில், பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாடகர் நிக் ஜோனாஸை திருமணம் புரிந்தார். ஜோத்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக இவர்களின் திருமணம் நடைபெற்றதைத் தொடர்ந்து, இந்தியாவில் மூன்று முறை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இவற்றில் ஹிந்தி திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து, தற்போது பிரியங்கா-நிக் ஜோடி சுவிட்சர்லாந்திற்கு தேனிலவு பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் ஹாலிவுட்டில் உள்ள தங்களது நண்பர்களுக்காக விருந்து வைக்க நினைத்த இந்த ஜோடி, 4வது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் கலந்துகொள்ள பிரியாங்காவின் தோழியும், பிரித்தானிய இளவரசியுமான மேகன் மெர்க்கலுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் ஹாலிவுட் பிரபலம் டிவைன் ஜான்சன், கேரி வாஷிங்டன், எலன் டிஜெனெரிஸ் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திருமண வரவேற்பு ஜனவரியில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. சுவிஸில் இருந்து மும்பை வரும் பிரியங்கா, படப்பிடிப்பில் கலந்துகொண்டு பின்னர் இம்மாத இறுதியில் நிக் ஜோனாஸுடன் லாஸ் ஏஞ்சல்ஸில் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.