தமிழகத்தில் பெண் நிர்வாகி ஒருவரிடம் ஆவின் விடுதியில் பரமன் மற்றும் பாண்டியன் என்பவர்கள் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஆவினில் பரமன் என்கிற பரமானந்தம் என்பவர் வாகன ஓட்டுனராக இருக்கிறார். இவர் அண்ணா தொழிற்சங்கத்தின் மாநில இணைசெயலாளர் பொறுப்பிலும் உள்ளார்.
இந்நிலையில் ஆவினில் தற்காலிக பணிபுரியும் பெண் பணியாளர் ஒருவரும், இவரும் ஆவின் விடுதியில் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
பணிநிரந்தரம் செய்வதாக வாக்குறுதி கொடுத்து தற்காலிக பெண் பணியாளரை தவறாக பயன்படுத்தியதாக பரமன் மட்டுமின்றி அவரது நண்பர் ஆவின் அண்ணா தொழிற்சங்க தலைவருமான பாண்டி என்பவரின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாண்டி என்பவரும் அதே பெண்ணுடன், அதே அறையில் உல்லாசமாக இருக்கும் காட்சிகள் அடுத்தடுத்து வெளியானதால், இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் காட்டுத் தீ போல் பரவியது.
ஆனால் வெளியாகியுள்ள காட்சிகளுக்கும், தங்களுக்கும் எந்த வித தொடர்பு இல்லை எனவும் தங்கள் மீது அவதூறு பரப்பும் மதுரை ஆவின் பொதுமேலாளர் மீது வழக்கு தொடர இருப்பதாகவும் சர்ச்சைக்குள்ளான, பாண்டியனும், பரமனும் தெரிவித்துள்ளனர்.