காதல் கணவருக்கு மேகன் அளித்துள்ள கிறிஸ்துமஸ் பரிசு தெரியுமா?

கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்னரே தனது காதல் கணவருக்கு பெரிய கிறிஸ்துமஸ் பரிசொன்றை அளித்திருக்கிறார் மேகன்.

வழக்கமாக பாக்ஸிங் தினத்தன்று தனது குடும்பத்தாருடன் வேட்டைக்கு செல்லும் பிரித்தானிய இளவரசர் ஹரி, இம்முறை வேட்டைக்குச் செல்லப்போவதில்லை என்றும், ஹரியின் மனைவி மேகன் ஒரு விலங்குகள் நல அபிமானி, அதனாலேயே ஹரி இந்த ஆண்டு வேட்டைக்கு செல்வதை ரத்து செய்து விட்டார் என்றும், அதனால் அவரது சகோதரர் வில்லியம் மன வருத்தத்தில் இருக்கிறார் என்று பிரித்தானிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில்,

தற்போது அதெல்லாம் வதந்தி என்றும், ஹரி தனது குடும்பத்தாருடன் வேட்டைக்கு செல்வதில் தனக்கு மகிழ்ச்சியே என்று தெளிவாக கூறிவிட்டதாக அரண்மனை வட்டாரத்தில் நம்பிக்கைக்குரிய ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஹரி மேகனுடன் சேர்ந்து வாழத்தொடங்கிய பின்னரும் தனது நண்பர்களுடன் வேட்டைக்கு சென்றதும், இந்த ஆண்டின் துவக்கத்தில், வேட்டைக்காகவே ஒரு லாப்ரடார் நாய்க்குட்டியை ஹரி மேகன் தம்பதி வாங்கியதும் தெரியவந்துள்ளது.

இந்த செய்தி, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதோடு, ஹரி இனி வேட்டைக்கு வரமாட்டாரோ என்ற கவலையில் இருந்த அவரது வேட்டைக்கார கூட்டாளிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஆண்டு ஹரி பாக்ஸிங் தினத்திற்கு வேட்டைக்கு செல்லாததை பெரிது படுத்தியிருந்த பிரித்தானிய பத்திரிகைகள், தற்போது எதனால் அவர் அவ்வாறு முடிவெடுத்தார் என்பது தெரியவில்லை என்று ஜகா வாங்கியுள்ளன.