மகிந்த ராஜபக்சவின் குடும்ப ஆட்சியானது முடிவுக்கட்டத்தை எட்டிக் கொண்டிருப்பதாக அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க,
நாட்டை மொத்தமாக விழுங்கிவிடும் மகிந்த ராஜபக்சவின் குடும்ப உறவினர் ஆட்சி முறை எதிர்வரும் 2019 ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்துவிடும்.
மகிந்த ராஜபக்ச பலதரப்பட்ட தரப்பினருடன் உடன்படிக்கைகளை மேற்கொண்டு தமது நிலையை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கின்றார்கள், ஆனால் அந்த யுகம் மீண்டும் அவர்களுக்காக வராது.
சிறிலங்கா சுதந்திர கட்சியை ஜனநாயகமாக்குவதற்கு முயற்சிக்கிறார்கள். ஒருவேளை அது சிறிலங்கா பொதுஜன பெரமுனவாக கூடஇருக்கலாம்.
இதேவேளை, திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு மற்றும் அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்பட வேண்டும்.
அரசியல்வாதிகளின் மகன்களாக இருப்பதால் அவர்களுக்கு அரசுத் தலைவர்கள் பதவி பொருத்தமானதாக இருக்காது என்றார்.