நான் தொட்டால் என்ன ஆகும் தெரியாது.!! கொந்தளிப்பில் ஒபிஸ்.!!

ஆண்டிபட்டியில் நடைபெற்றிருந்த இடைத்தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வதை டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சந்தித்து தூது விட்டதாக ஒபிஸ் கூறியுள்ளார்.

தேனி மாவட்டத்தில் இருக்கும் ஆண்டிபட்டியில் இடைத்தேர்தல் ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு துணை முதலைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பங்கேற்று அவரது தலைமையில் ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அமைச்சர் சீனிவாசன்., அமைச்சர் விஜயபாஸ்கர்., கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன்., காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ முருகுமாரன்., தேனி எம்.பி பார்த்தீபன்., மாவட்ட செயலாளர் சையது கான்., மாவட்ட துணை செயலாளர் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் இடைத்தேர்தலுக்கான ஆலோசனைகளை அனைவரும் வழங்கிய பின்னர் இறுதியாக பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆண்டிபட்டி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் ரூ.1088 கோடி செலவில் வளர்ச்சிப்பணிகள் அனைத்தும் நடைபெற்றிருக்கும் வேலையில்., எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை என்று கூறி வருகின்றனர்.

மேலும்., தங்கதமிழ்செல்வன் வெளியேறிய பிறகுதான் வளர்ச்சி பணிகள் அனைத்தும் தடையின்றி நடைபெற்று வருகிறது. கடந்த 2007 ம் வருடம் கட்சியில் ருந்து வெளியேற்றப்பட்ட தினகரன்., ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை அவரை ஒரு முறை கூட சந்தித்தது இல்லை., மன்னிப்பு கடிதமும் எழுதவில்லை., ஜெயலலிதா இறந்த பின்னர் வந்துவிட்டார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமயத்தில் தாடி வைத்துக்கொண்டும்., கோவில் கோவிலாய் பிரார்த்தனை செய்து கொண்டும் இருந்தோம். அந்த சமயத்தில் தினகரன் ஜெயலலிதாவின் மீது எந்த விதமான அக்கறையும் இல்லாமல் பாண்டிச்சேரியில் குடியமர்ந்தார்.

தினகரன் இன்று வந்துவிட்டு அதிமுக கட்சியானது அழிந்து விடும் என்று கூறி வருகிறார்., இன்னும் பல விதமாக பேசிக்கொண்டு வருகிறார். அவர் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் தகுந்த முறையில் பதிலளித்து வருகிறோம்.

தேவையற்ற முறையில் தினகரன் என்னை மீண்டும் மீண்டும் தொடுகிறார்., நான் தொடும் பட்சத்தில் தினகரன் எங்கு சென்று விழுவார் என்பது எனக்கு தெரியாது. என்னை சந்திப்பதற்கு தினகரன் ஆதரவில் இருக்கும் நான்கு எம்.எல்.ஏக்கள் தூது அனுப்பியதையும்., செந்தில் பாலாஜி அவர்கள் எங்களிடம் மீண்டும் இணைவதற்கு மனு போட்டதையும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மறுத்துவிட்டார்.

மேலும் செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி தொகுதியில் செய்த துரோகத்தை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பட்டியலிட்டு கூறினார்., மேலும் செந்தில் பாலாஜி செல்லும் கட்சியானது உருப்படாது என்றும் பதவி ஆசை அவருக்கு உள்ளது என்று தெரிவித்தார் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கூறினார்.