புலம்பெயர் தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனை காப்பாற்ற போராடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை காப்பாற்ற மேற்கொண்ட போராட்டத்தை விடவும், சம்பந்தனை காப்பாற்ற பாரிய போராட்டம் ஒன்றை புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இருந்ததனை சம்பந்தன் எடுத்துச் சென்றார். எனினும் மீண்டும் அவர் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு சென்றுள்ளதாக டலஸ் அலகபெரும மேலும் தெரிவித்துள்ளார்.