தூத்துக்குடி: தூத்துக்குடியில் காதல் தோல்வியால் மதுவில் விஷம் கலந்து தம்பி தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து அவர் மிச்சம் வைத்து சென்ற மதுவை குடித்த அண்ணனும் பலியாகிவிட்டார்.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் விஜய். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.
இந்நிலையில் காதல் தோல்வி அடைந்ததை விஜயால் தாங்க முடியவில்லை.
இதையடுத்து அவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது வீட்டிற்கு வந்த அண்ணன் ராஜா, விஜய் போதையில் படுத்துக் கிடப்பதாக நினைத்துக் கொண்டார்.
மேலும் அங்கிருந்த விஷம் கலந்த மதுபானத்தை ராஜா தெரியாமல் எடுத்து குடித்து விட்டார். இதனால் அவரும் பலியாகிவிட்டார்.
ஒரே வீட்டில் அண்ணன், தம்பி இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.