மஹிந்தவுக்கு கிடைத்த வெற்றி!

சர்ச்சைக்குரிய எதிர்க்கட்சி தலைலவர் மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் அல்ல என உள்ளூராட்சி என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

அவர் பொதுஜன பெரமுன உறுப்பினர் அல்ல என்பதனை அறிவிப்பதற்கு போதுமான தெளிவாக விடயங்கள் உள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் உதேனி அத்துகோரல தெரிவித்துள்ளா்.

வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் தவறான எடுத்துக்காட்டை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் இன்று குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச, அடுத்த உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு விண்ணப்பத்திரம் மாத்திரமே வழங்கினார்.

அதனை சுதந்திரன் சம்பந்த மற்றும் மக்கள் விடுதலை உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர் பத்திரம் என கூறி வருகின்றார்.

மஹிந்த தனது கையால் வழங்கிய விண்ணப்ப பத்திரத்திற்கும், உறுப்புரிமை பத்திரத்திற்கும் அவர்கள் வித்தியாசம் தெரியாமல் உள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவை, சமகால அரசாங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொண்டுள்ளார்.

எனினும் அரசியலமைப்புக்கு முரணானது என தமிழ் தேசிய கூட்டமைப்பு சபாநாயகரிடம் மனு வழங்கியுள்ளது.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற சர்ச்சைக்கு விரைவில் பதில் வழங்குவதாக சபாநாயகர் அறிவித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகிச் சென்ற மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொண்டமையால் இந்த சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.