ஜெய்ப்பூர் மாநிலத்தில் சாலையோரத்தில் ஆடைகள் கிழிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர் மாநிலம் லுனியாஸ் பகுதியிலுள்ள சாலை ஓரத்தில் 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் கிடப்பதை, அவ்வழியாக சென்றவர் பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், இறந்த பெண்ணின் ஆடைகள் அனைத்தும் கிழிந்த நிலையில் உள்ளது. அவருடைய தலைப்பகுதியில், உடல்பகுதிகளிலும் லேசான காயங்கள் இருப்பதால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
மேலும், பெண்ணின் நாக்கு வெளியில் வந்த நிலையில் இருந்ததால்,வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு இங்கு தூக்கி வீசப்பட்டிருக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.