இளவரசிக்கு வந்த உருக்கமான கடிதம்!

பிரித்தானிய இளவரசி மெர்க்கலுக்கு அவருடைய சகோதரி உருக்கமான கிறிஸ்துமஸ் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார்.

பிரித்தானிய இளவரசி மெர்க்கலின் திருமணத்திற்கு முன்பு, 75 வயதான அவருடைய தந்தை தாமஸ் சர்ச்சையான கருத்துக்களை கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதன் விளைவாக மெர்க்கல் தந்தையுடனான உறவை முறித்து கொண்டு 6 மாதமாக பேசாமல் இருந்து வருகிறார். வயதான காலத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தாமஸ் தற்போது சிறிய வீட்டில், கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட உள்ளார்.

இந்த நிலையில் மெர்க்கலின் சகோதரி சமந்தா, ஒரு உருக்கமான கிறிஸ்துமஸ் வாழ்த்து கடிதத்தை அனுப்பியுள்ளார்.

அதில், விடுமுறை நாட்கள் குடும்பத்திற்கான நேரம் மற்றும் உணர்வுபூர்வமான ஒன்று. உனக்கு தெரியும், அப்பா உன்னை தொடர்பு கொள்ள பலமுறை முயற்சி செய்து வருகிறார்”.

“நீ அவரை விட்டு விலகி செல்வதால், மிகுந்த காயத்திற்கு உள்ளாகியிருக்கிறார். வாழ்க்கை மிகவும் சிறியது மற்றும் அப்பா அற்புதமானவர் என்பது உனக்கு தெரியும்”.

“தயவு செய்து அவருடைய கடைசி காலத்தில் உன்னுடைய அன்பின் மூலம் மகிழ்ச்சியை கொடு. இதுதான் சரியான நேரம் இதைப்பற்றி சிறிது யோசி” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தனியார் தொலைக்காட்சியில் பேசிய தாமஸ், ‘விரைவில் ஏதாவது தீர்வு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.நான் என் மகளை மிகவும் நேசிக்கிறேன், அவள் அதை அறிந்து கொள்ள வேண்டும். அவள் என்னை கூப்பிடுவாள், எப்படியாவது என்னை அடைந்துவிடுவாள் என கூறியிருந்தது” குறிப்பிடத்தக்கது.