நீண்ட நாட்களுக்கு பிறகு விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய ஆராய்ச்சியாளர் ஒருவர், புதிதாக பிறந்த குழந்தை போல நடைபழகும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
அமெரிக்க வானூர்தி நிலையமான NASA விண்வெளி வீரர் ட்ரூ ஃபைஸ்டல் (AJ Drew Feustel), 197 நாட்களுக்கு பிறகு தன்னுடைய குழுவினருடன் மே மாதம் பூமி திரும்பினார்.
அவர் தனது முன்னாள் குடியிருப்பு இல்லமான சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) இல் ஆறு மாதங்கள் தங்கி நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
Welcome home #SoyuzMS09 ! On October 5th this is what I looked like walking heel-toe eyes closed after 197 days on @Space_Station during the Field Test experiment…I hope the newly returned crew feels a lot better. Video credit @IndiraFeustel pic.twitter.com/KsFuJgoYXh
— A.J. (Drew) Feustel (@Astro_Feustel) December 20, 2018
விண்வெளியில் இருந்து திரும்பிய வீரர்களுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுவது வழக்கமான ஒன்று.
அந்த வகையில், ட்ரூவிற்கு அனைத்து வகையான சிகிச்சைகளும் அளிக்கப்பட்ட பின்னர், நடைபழக அங்கிருக்கும் ஆராய்ச்சியாளர்கள் சிலர் உதவுகின்றனர்.
அக்டோபர் மாதம் எடுக்கப்பட்ட இந்த வீடியோ காட்சியினை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ட்ரூவின் மனைவி இந்திரா, சமீபத்தில் விண்வெளியில் இருந்து திருப்பிய வீரர்கள் நலமாக உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ காட்சியானது தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும், வீடியோ வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்ததோடு, விண்வெளி வீரர்கள் எத்தகைய சிரமங்களை சந்திக்கின்றனர் என்பதை அறிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறியுள்ளனர்.