“மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பேரூந்து கோர விபத்து

இன்று(24.12.2018) அதிகாலை புத்தளம்-அநுராதபுரம் பிராதன வீதியில் கோர விபத்து இருவர் கவலைக்கிடம்,யானை பலி இச்சம்பவமானது இன்று அதிகாலை 2மணியளவில் இடம்பெற்றுள்ளது மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ப்யணிகளை ஏற்றும் சொகுசு பேருந்து ஒன்று அநுராதபுரம் புத்தளம் வீதியில் புத்தளம் நகருக்கு 4கிலோமீற்றர் முன்பாக உள்ள யானை காடு வழியாக பயணிக்கும் பொழுது எதிர்பாராமல் வீதியின் குறுக்கே சென்ற யானையுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது குறித்த விபத்தில் யானை பலியானதுடன்,பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் படுகாயமடைந்த நிலையில் வத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளனர் பேருந்தின் முன்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது என்பதுடன் நடத்துனர் கவலைகிடமான நிலையில் உள்ளார் என்றும் அறியப்படுகிறது பேருந்தில் பயணித்த பயணிகளிற்கு எவ்வித சேதமும்ம் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.