9-ஆம் வகுப்பு மாணவியை, பள்ளியின் தலைமை ஆசிரியர் கழிவறைக்குள் வைத்து செய்த கொடூரம்!

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே அரசு பள்ளியில் இரு தினங்களுக்கு முன்பு, மாலையில் பள்ளி நேரம் முடிந்ததும் 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த மாணவியை பின்தொடர்ந்து சென்ற அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பாஸ்கர்(53), கழிவறையில் வைத்து மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனையடுத்து தலைமையாசிரியர் பாஸ்கர் அந்த மாணவியை மிரட்டி இந்த சம்பவத்தை யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டி அனுப்பியுள்ளார். வீட்டுக்கு வந்த மாணவி தலைமை ஆசிரியர் தனக்கு அளித்த பாலியல் தொல்லை பற்றி பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.

மகள் கூறியதை கேட்டு பதறிப்போன பெற்றோர், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் பாஸ்கர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த தலைமை ஆசிரியர் பாஸ்கர் உஷாராக தலைமறைவாகி உள்ளார். மாணவியின் பெற்றோர்களும் பொதுமக்களும் தலைமை ஆசிரியர் பாஸ்கர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதனையடுத்து போலீசார் தலைமை ஆசிரியர் பாஸ்கரை தீவிரமாக தேடி வருகின்றனர்.