இன்று தந்தை பெரியார் மற்றும் மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் பழனிச்சாமி, மற்றும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அஞ்சலி செலுத்தினர். நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற உழைப்போம் – முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து இன்று மதியம் 12 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த அமைச்சரவை கூட்டத்தில் தற்போது தமிழகத்தை உலுக்கி கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படும் என்ற அறிவிப்பு, கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட கொடுக்கப்பட்ட அனுமதி, மேலும் தமிழகத்தில் தற்போது மத்திய அரசு மேற்கொண்டு வரும் திட்டமான நெய்வேலி நிலக்கரி மூன்றாவது சுரங்கத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அறிக்கையினை எதிர்த்து மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதேபோல கொங்கு மண்டல மற்றும் வட மாவட்டங்கள் உட்பட மொத்தம் 13 மாவட்டங்களில் உயர்மின் கோபுரங்கள் விவசாய நிலங்களில் அமைக்கப்படுவதை எதிர்த்தும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
முன்னதாக இன்று காலை 10 மணி அளவில் சென்னை அறிவாலயத்தில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் அடங்கிய கூட்டம் ஆரம்பித்து, நடைபெற்று வருகிறது.