ஓட்டல் கிளப்பிய மரண பீதி..?

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் ஆத்துமேட்டில் கரூர் ரோட்டில் உள்ளது ஸ்ரீ முருகன் ஹோட்டல். இங்கு சமீபத்தில் காலை 9 மணியளவில் ஓட்டலின் முன்பகுதியில் மெயின் ரோட்டருகே சிலிண்டர் வைத்து இரண்டு அடுப்புகளுடன் பணிகள் நடந்து கொண்டிருந்தது.

திடீரென சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு கேஸ் வெளியேறியது. இதனால் பதறிப்போன கடை உரிமையாளர் கார்த்திக்க மற்றும் தொழிலாளர்கள், கடையில் சிற்றுண்டி சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் என அனைவரும் கடைக்கு வெளியே ஓடினர்.

கேஸ் வேகமாக லீக் ஆனதால் மண் மற்றும் ஈரச்சாக்குகளை போட்டு அனைத்தனர். ஆனாலும் காஸ் லீக் ஆகிக்கொண்டே இருந்தது.

தீயணைப்பு துறை நிலைய அலுவலர் கண்ணன் தலைமையிலான வீரர்கள் வந்து சிலிண்டரை துாக்கி தண்ணீர் நிரம்பிய டப்பில் போட்டு கவிழ்த்தனர். அதன் பிறகே மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

வேடசந்துார் பகுதியில் உள்ள பெரு ம்பாலான ஓட்டல்கள் மற்றும் டீ கடைகளில் கேஸ் சிலிண்டர்களை மக்கள் கூடும் பகுதியில் அதுவும் மெயின் ரோட்டருகிலேயே வைத்து வியாபார பணிகள் நடைபெறுகிறது.

இது போன்ற நேரங்களில் விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாகவும், போதிய மாற்று நடவடிக்கைகளை எடுக்க காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.