இசை நிகழ்ச்சியில் புகுந்து பல உயிர்களை காவு வாங்கிய சுனாமி!

இந்தோனேசியாவை பொறுத்த வரையில் தற்போது அவர்களுக்கு போதாத காலம் என்றுதான் கூற வேண்டும். அந்த நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக உலுக்கிய நிலநடுக்கத்தாலும், அதற்கு பின்னர் தாக்கிய சுனாமியாலும் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.

இந்த சுனாமியின் தாக்கத்தால் பல மக்கள் உயிரை இழந்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் உடமைகளை இழந்து தவித்து வந்த நிலையில், அதன் தாக்கத்தில் இருந்து தற்போது தான் மக்கள் மீண்டும் வந்துகொண்டு இருந்தனர்.

இந்தோனேசியாவின் சுந்தா ஸ்ட்ரேய்ட் கடற்கரை பகுதியில் அங்குள்ள உள்ளூர் நேரப்படி சுமார் 9.27 மணியளவில் யாரும் எதிர்பார்க்காத வேலையில் சுனாமி அலைகளானது தாக்கியது. இந்த சுனாமி சுமார் 65 அடி உயரத்தில் (20 மீட்டர்) சீறிப்பாய்ந்த சுனாமி அலைகள், எதிர்பாராத மக்கள் சுமார் 281 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில், இசை நிகழ்ச்சி ஒன்றில் சுனாமி அலை புகுந்து மக்களை அடித்துச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. டான்செங் லெசங்க் கடற்கரையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. ஏராளமான மக்கள் இதில் பங்கேற்று இசை நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டு இருந்தனர்.

பாடகர் மிகுந்த உற்சாகத்துடன் பாடிக்கொண்டிருந்த சமயம், திடீரென இசை நிகழ்ச்சிக்குள் சுனாமி அலைகள் புகுந்தது. மேடை முழுவதும் தண்ணீர் புகுந்ததால் மேடை சரிந்து, அனைவரும் கீழே விழுகின்றனர். இசைக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் சுனாமி அலையில் அடித்துச் சென்றனர். இதில் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்களில் பலர் பலியானார் மற்றும் சிலர் காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சுனாமியில் சுமார் 556 வீடுகள், 60 உணவு விடுதிகள் மற்றும் 335 படகுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.