இந்தியா பல்வேறு மதங்களையும், சமயங்களையும் உள்ளடக்கியது. அவற்றில் மக்கள் தொகையில் பெரும்பங்கு வகிப்பது, இந்துக்களே அதிலும், சிவனை வழிபடக்கூடிய மக்களே!! சிவனை சாதாரண குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் வழிபட்டாலும், சிவனடியார்கள் மற்றும் அகோரிகள் கடவுளை அணுகும் முறை வித்தியாசமானது.
சிவனடியார்கள்: சிவனடியார்களில் பலர் குடும்ப வாழ்க்கையில் உள்ளவர்களும் உள்ளனர். அவர்கள் குடும்ப வாழ்க்கையையும் கவனித்துக் கொண்டு சிவனை எப்போதும் நினைத்து கொண்டு எல்லாவற்றிற்கும் சிவனை நினைத்தே செய்து கொண்டும் இருப்பார்கள். ஆனால், தங்களை சிவனடியாராக நினைத்து கொண்டிருக்கும் பலர் உண்மையில் சிவனடியாரா? என்றால் சந்தேகமே.!
ஆம் உண்மையில் சிவனடியார் என்பவர் ஆசை, கோபம், களவு, பணம், கவலை மற்றும் கடமைகளை இல்லாதவராக இருத்தல் வேண்டும் என்கிறது புராணம். இவர்கள் குடும்ப வாழ்க்கையையும் சரியாக செய்யாமல் கடவுள் வழிபாட்டையும் சரியாக செய்யாமல் இருப்பார்கள். இவர்கள் உண்மையான சிவனடியார்கள் இல்லை. இன்றைக்கு சிவனடியார்களின் 95 % உண்மையானவர்கள் அல்லர்.
இவர்ளை பற்றிய சரியான புரிதல் மக்களிடையே இல்லை. உண்மையில் இவர்கள் எதற்காகவும் யாரையும் தொந்திரவு செய்வதில்லை. இவ்வுலகில் தன்னை படைத்த சிவன் ஒருவனை தவிர வேறு யாருடனும் பேசவோ, பழகவோ, தொடர்பு வைத்து கொள்ளவோ விரும்பாதவர்கள். தங்கள் வாழ்க்கையை கடவுளுக்கு அர்பணித்து, உலக சந்தோஷங்களை துறந்து மோட்சம் அடைவது ஒன்றே இலக்காக கொண்டவர்கள். தன்னையும் இறைவனையும் தேடுவது ஒன்றே வாழ்க்கையின் இலட்சியம் என்றிருப்பார்கள்.
இவர்கள் உலகில் எது நடந்தாலும் அதை ஏற்று கொள்ள கூடியவர்கள் எதை பற்றியும் கவலை கொள்ளாதவர்கள். ஏனெனில், உலகில் இதெல்லாம் நடக்க வேண்டும் என்பது கடவுள் சித்தம். அது, இயற்கை நியதி. அதில் தலையிடுவது முறையானதல்ல, என்றிருப்பார்கள். பிறருக்கு அநியாயம் நடந்தாலும் அதனை கண்டு கொள்ள மாட்டார்கள். பிறருக்கு உதவியும் செய்ய மாட்டார்கள், துன்பமும் செய்ய மாட்டார்கள்.
புறத்தோற்றம்:
இவர்களில் சிலர் கருப்பு நிற ஆடை அணிந்தும், சிலர் காவி நிற உடை அணிந்தும் இருப்பார்கள். மேலும், சிலர் எந்த விதமான அடையும் அணியாத வண்ணம் உலாவருவார்கள். நிர்வாணமாக இருப்பது வாழ்க்கையின் அடிப்படை தேவைகளுடன் கூடிய அன்பு மற்றும் மன உறுத்தல்களை அழிக்கும்.
நிர்வாணமாக இருப்பதால் அவர்களே உண்மையான மனித வடிவின் பிரதிநிதித்துவம். நாம் பிறக்கும் போது, நிர்வாணமாக தான் இருந்தோம். அதே போல் இறக்கும் போது இந்த கோலத்தில் தான் இந்த உலகத்தை விட்டு வெளியேறுகிறோம். எனவே, இவ்வாறு இருப்பதே இயற்கை நியதி என்று நிர்வாணமாக இருப்பதற்கு அவர்கள் வெட்கப்படுவதில்லை.
நம்பிக்கை மற்றும் பழக்க வழக்கங்கள்:
மிகவும் மாறுபட்ட நிலையிலான மன உணர்வில் வாழ்பவர்கள் இவர்கள் என தோன்றும். ஆனால், உண்மையில் அவ்வாறல்ல. அவர்கள் மனநிலை முழுக்க முழுக்க, இயற்கை நிலையிலான உணர்வை கொண்டிருக்கும்.
பிணங்களை உண்ணும் பழக்கங்கள், கிடைத்ததை உண்ணுவது, நினைத்தபடி செயல்படுவது, ஆடையின்றி இருப்பது, மேலும், தனது சிற்றின்ப வேட்க்கைக்காக பிணங்களுடன் உடலுறவு கொள்வது என எவரையும் பாதிக்காத விடங்களை மட்டுமே மேற்கொள்ளும் பழக்கம் உள்ளவர்கள். உலகத்தில் எதுவுமே அசுத்தமில்லை என்பது அகோரிகளின் நம்பிக்கையாகும்.
பயங்கரமான இடமாக பிறரால் பார்க்கப்படுகிற மயான பூமி போன்ற இடங்களிலே இவர்கள் வாழ்வார்கள். அதில் ஒன்று தான் இவ்வகையான சாதுக்கள் பிணங்களின் சாம்பலை தங்கள் உடல் முழுவதும் பூசிக்கொண்டு, மனித மண்டை ஓட்டில் பானம் பருகி, மனித தசைகளை உட்கொண்டு வருவார்கள்.
“அழிக்கும் கடவுளான சிவபெருமான் மயான பூமியல் தான் வாழ்கிறார். அதனால் தான் மயான பூமிக்கு அருகில் வாழ்கின்றனர் அகோரிகள். எரித்த சடலத்தின் சாம்பல் தான் உலகத்திலேயே தூய்மையானது. உலகத்தில் எதுவுமே நிரந்தரமில்லை, வாழ்க்கை முடிந்தவுடன் அனைத்துமே சாம்பலாகி விடும் என்பதையே இந்த சாம்பல் குறிக்கிறது” என அவர்கள் கருதுவதால் அதனை உடல் முழுவதும் பூசிக் கொள்வார்கள் அவர்கள்.
பாம்பினால் கடிபட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், புனித நபர்கள் மற்றும் பிறக்காத சிசுக்கள் போன்றவற்றின் சடலங்களை எரிக்க கூடாது அவர்களை கங்கை நீரில் மூழ்கடித்து விட வேண்டும் என்பது இந்து மத வழக்கமாகும். இந்த பிணங்களை பலிபீடமாகவும், இறந்த மனிதர்களின் எலும்புகள் மற்றும் மண்டை ஓடு போன்றவற்றை அணிகலன்களாகவும், கிண்ணமாகவும் பயன்படுத்தி வருகிறார்கள் அகோரிகள்.
மோட்சத்திற்காக கங்கையில் வீசப்படும் பிணங்களின் எலும்புகளை சேகரித்து வைத்துக் கொள்வார்கள். கோபம், பேராசை, மன உறுத்தல், பயம் மற்றும் வெறுப்பே சிவபெருமானை மனிதர்கள் உணர்ந்து கொள்ள தடையாக இருக்கும். இந்த பிணைப்புகளையும் நீக்கும் திசையில் தான் அகோரிகளின் அனைத்து வழக்கங்கள் அமைந்திருக்கும்.
சடங்குகள்:
இவர்களினால் செய்யப்படும் சடங்குகள் மிகப்பெரிய பயமான மரண பயத்தை அழித்திடும். காதல், வெறுப்பு, பொறாமை மற்றும் தற்பெருமை பிணைப்புகள் ஆன்மாவை விட்டு நீங்கினால், அவன் சிவனை அடையலாம் என அகோரிகள் நம்புகின்றனர். அனைத்திலும், ஏன் தூய்மையில்லாத மற்றும் சுத்தமில்லாதவற்றிலும் கூட கடவுள் இருக்கிறார் என்பதே அவர்களின் நம்பிக்கையாகும்.
அகோரிகள் இறந்த சடலங்களுடன் சேர்ந்து வாழ்வதால் அவர்களை பெரும்பாலும் மாய வித்தைகளுடன் ஒப்பிட்டு பார்ப்பார்கள் மக்கள். ஆனால் அவர்களோ கடவுளை தேடும் காரணத்தினால் தீவிரமான வழிமுறைகளை பின்பற்றி வாழும் புனிதமான எளிய மனிதர்களாகும்.