நாளைய நாளில் மதுப் பிரியர்களிற்கு ஆப்பு வைத்த மைத்திரி!!

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நட்சத்திர ஹொட்டல்கள் மற்றும் மதுபான கடைகளை மூடுமாறு ஜனாதிபதியிடம் கொழும்பு பேராயர் கர்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 20 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் பண்டிகை நிகழ்வின் போதே அவர் இதன் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அதன் பிரகாரம் நாளை நட்சத்திர ஹொட்டலும் மதுபான நிலையங்களிலும் மது விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் எனவும், இல்லையெனில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், கிறிஸ்மஸ் உண்மையான அர்த்தம் அலங்காரமோ, தமது ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதோ அல்ல என தெரிவித்த கர்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களின் வலியை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உதவிகளை வழங்க ஒன்று சேர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.