வந்தா ராஜாவாக தான் வருவேன்! ஆஸ்திரேலியா பறக்கும் டோனி!

தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி, மூன்று டி-20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி-20 தொடர் சமனில் முடிந்த நிலையில், 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் தலா ஒரு வெற்றியுடன் டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது

இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி, மெல்போர்னில் வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் வரும் ஜனவரி 3-ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. அதன்பிறகு, ஆஸ்திரேலியா அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. ஆஸ்திரேலியா தொடர் ஜனவரி 18-ம் தேதி உடன் முடிந்த நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் இருந்து நியூசிலாந்துக்கு பறக்கிறது. அங்கு 5 ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த போட்டிகளுக்கான இந்திய அணியினை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா மற்றும் நீயூசிலாந்து அணிகளுடன் விளையாடக்கூடிய ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி (Capt), ரோஹித் சர்மா (vc), KL ராகுல், ஷிகர் தவான், ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், MS டோனி (WK), ஹர்டிக் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ராஹ் , கலீல் அஹ்மத் , முகமத் ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

நீயிசிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருக்கான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி (Capt), ரோஹித் சர்மா (vc), KL ராகுல், ஷிகர் தவான், ரிஷப் பாண்ட், தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், MS டோனி (WK), ஹர்டிக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ராஹ் , கலீல் அஹ்மத் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளார்கள்.

ஒருநாள் அணியில் இடம் பிடித்து இருந்த ராயுடு, ஜடேஜா, ஷமி ஆகியோர் 20 ஓவர் அணியில் இடம்பெறவில்லை அவர்களுக்கு பதிலாக ஹர்டிக் பாண்டியாவின் சகோதரர் க்ருனால் பாண்டியா மற்றும் ரிஷப் பாண்ட் இடம்பிடித்துள்ளார்கள்.