பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் மரத்தில் இறந்து போன நபரின் முகம் காணப்பட்டதால், இளம் பெண் ஒருவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியின் Bolton-ஐ சேர்ந்தவர் Melanie(31). மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் இவர், அங்கு உட்கார்ந்து கொண்டே, தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டுள்ளார்.
அப்போது அவர் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த புதிய கிறிஸ்துமஸ் மரத்தில் அழகுக்காக வைக்கப்படும், கண்ணாடி பந்து கீழே விழந்து நொறுங்கியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், சுமார் 15 நிமிடம் அந்த மரத்தின் அருகேயே செல்லாமல் இருந்துள்ளனர். அதன் பின் அது சுத்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இது நடைபெறுவதற்கு முன்னர், அதாவது பிற்பகலில் Melanie இந்த மரத்தை புகைப்படமாக எடுத்து தன்னுடைய அம்மாவிற்கு அனுப்பியுள்ளார்.
அந்த புகைப்படத்தை சற்று உற்றுநோக்கிய போது, அதில் ஒரு உருவம் தெரிந்துள்ளது. இது பேய் என்று பயந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து Melanie அதை தெளிவாக பார்த்த போது, கண் மற்று மூக்கு போன்றதுடன் முகம் தெரிந்துள்ளது. அவளுடன் பணி செய்யும் பெண்ணின் சகோதரர் சமீபத்தில் தான் இறந்துள்ளான், பார்ப்பதற்கு அவனைப் போன்றே இருப்பதாகவும், தான் இங்கிருக்கிறேன் என்று உணர்த்துவதாகவும் அவர் ஒரு வித பயத்தில் கூறியுள்ளார்.
ஆனால் இது உண்மையா, பின்னால் கண்ணாடி போன்று இருப்பதால் வேறு யாரேனும் சிறுவர்கள் வந்தார்களா? என்பது குறித்து தெரியவில்லை. தற்போது அந்த புகைப்படம் கிறிஸ்துமஸ் மரத்தில் பேய் என்று வைரலாகி வருகிறது.