20 வருடங்களுக்கு பின் ஆசிரியரை பழிவாங்கிய மாணவன்!

சீனாவில் தன்னை அடித்த ஆசிரியரை மாணவன் ஒருவன் 20 வருடங்களுக்கு பின் பழிவாங்கியுள்ள வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சீனாவைச் சேர்ந்தவர் சாங். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, ஆங்கில் வகுப்பின் போது கண் அசந்து தூங்கியுள்ளார்.

இதைக் கண்ட ஆங்கில ஆசிரியர் ஆத்திரமடைந்து சாங்கை சக மாணவர்கள் முன்னிலையில் கடுமையாக அடித்துள்ளார். இதனால் சாங் மிகவும் அவமானம் அடைந்துள்ளார். ஆனால் அப்போது அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

இருப்பினும் இதை மனதில் வைத்துக் கொண்டே இருந்த சாங், நேரம் கிடைக்கும் போது பழிவாங்க காத்துக் கொண்டிருந்தார். அந்த வகையில், 20 வருடங்கள் கழித்து அந்த ஆசிரியரை நடுரோட்டில் பார்த்த சாங், பிளாஷ்பேக்கை நினைத்துப் பார்த்து ஆத்திரமடைந்துள்ளான்.

பின்னர் வேகமாக அவர் அருகே வந்த அவன் சரமாரியாக அடித்துவிட்டு சென்றான். இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகினறனர்.

ஆசிரியரை மாணவன் அடிக்கும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.