அவுஸ்திரேலிய அணியின் தலைவரான டிம் பெயின் கோஹ்லி கோபப்படுவது குறித்து மீண்டும் சீண்டும் வகையில் பேசியுள்ளார்.
இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 26-ஆம் திகதி துவங்கவுள்ளது.
முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளதால், இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற கடுமையாக போராடும்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அணியின் தலைவர் டிம்பெய்ன் மற்றும் இந்திய அணியின் தலைவர் கோஹ்லி வார்த்தை போரில் ஈடுபட்டனர். இந்த தொடரில் கோஹ்லி ஆக்ரோசமான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் கோஹ்லி கோபப்படுவது குறித்து மீண்டும் சீண்டியுள்ளார் டிம்பெய்ன்.
அவர் கூறுகையில், இரண்டாவது டெஸ்டில், கோஹ்லியுடன் பல போராட்டங்கள் நடந்தது. நான் சர்வதேச போட்டியில் பங்கேற்காமல் கடந்த சில ஆண்டுகள் இருந்த போது கோஹ்லியின் விளையாட்டை தான் அதிகம் ரசித்தேன்.
தற்போது அவரை நேருக்கு நேராக களத்தில் சந்திக்கும் போது, சரியான சவாலாக உள்ளது. தொடர்ந்து இது போன்ற சவால் இருந்தால் தான் ரசிகர்களுக்கு அதிகம் பிடிக்கும்.
அவர் இப்படியே தொடர்ந்து கோவப்பட்டால், மைதானத்துக்கு வரும் ரசிகர் கூட்டம் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.