உடல் ஆரோக்கியத்துக்கு எந்தெந்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது என்று அறிந்திருப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் சாப்பிட்டபின் என்ன செய்யக் கூடாது என்று அறிந்திருப்பது.
புகைப்பிடித்தல் கூடாது
பெரும்பாலானோர் அதிகம் செய்யும் செயல் சாப்பிட்டவுடன் புகைப்பிடிப்பது. இப்படி செய்வது மிகவும் ஆபத்தானது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
ஒருவர் சாப்பிட்ட உடன் புகைப்பிடிப்பது என்பது அடுத்தடுத்து 10 சிகரெட்டுகளை புகைத்ததற்கு சமம் என்கின்றனர்.
இதனால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்.
தூங்கக் கூடாது
சாப்பிட்டவுடனே படுக்கையில் விழக் கூடாது. உண்ட உணவு செரிமானம் ஆவதற்கு சீரான ரத்த ஓட்டம் இருக்க வேண்டும். தூங்கினால் செரிமானத்துக்குத் தேவையான ரத்தம் கிடைக்காது என்பதால் செரிமான பாதிப்பு ஏற்படும்.
உடற்பயிற்சி கூடாது
சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்தல் கூடாது. உடற்பயிற்சி செய்யும்போது தசைகளுக்கு அதிக ரத்தம் செல்லும். இதனால் செரிமான உறுப்புகள் முறையாகச் செயல்பட போதிய ரத்தம் கிடைக்காது.
சாப்பிட்டு 3 அல்லது 4 மணி நேரம் கழித்து உடற்பயிற்சியில் ஈடுபடலாம். பொதுவாக வெறும் வயிற்றில் உடற் பயிற்சி செய்வதே நல்லது.
காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. சாப்பிட்டவுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டால், செரிமான உறுப்புகளால் செரிமானம் செய்யப்பட்ட உணவுகளை கிரகித்துக்கொள்ள முடியாது.
குளிக்கக் கூடாது
சாப்பிட்டவுடன் குளிப்பதும் சரியல்ல. அப்போது, கை, கால், உடல் பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் சென்று, செரிமான உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் இல்லாமல் போகும்.
இதனால் நாளடைவில் செரிமான உறுப்புகள் வலுவிழந்துவிடும். சாப்பிட்டுவிட்டால் இரண்டரை மணி நேரத்துக்குப் பிறகே குளிக்க வேண்டும்.
பழம், டீ கூடாது
சாப்பிட்டவுடன் பழம் எடுத்துக் கொண்டால் முதலில் பழம்தான் செரிமானம் ஆகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும். எனவே சாப்பிட்டு சில மணி நேரம் கடந்தபிறகு அல்லது சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு பழங்களைச் சாப்பிட வேண்டும்.