உனக்கு மட்டும் நல்ல பீசு.. நான் என்ன காமெடி பீசா..? முட்டி மோதிக்கொண்ட அதிமுக அமைச்சர்கள்!

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 1ஆம் தேதி திண்டிவனம் பகுதியில்4 இடங்களில் நடைபெற்ற அரசு விழாவில் 30 பள்ளிகளில் 6608 மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

இவற்றை வழங்கி தமிழகஅரசின் சாதனைகளை விளக்கி பேருரையாற்றினார் அமைச்சர் சி.வி.சண்முகம். திண்டிவனம் இவரது சொந்த ஊராகும்.பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழக அரசு மொத்தம் 28,000 கோடி ரூபாய் நிதிஒதுக்கி வழங்கப்பட்ட இந்த விலையில்லாமிதிவண்டிகளில் முன்புற கூடைகளில் கர்நாடக அரசின் சின்னம் பொறித்த தகடுபொருத்தப்பட்டிருந்தது.

அப்போது “தமிழகம், கர்நாடகம் இரு மாநிலங்களுக்கும் மிதிவண்டி சப்ளை செய்வதுஒரே நிறுவனம்தான். அதில் அங்கு அனுப்பவேண்டிய மிதிவண்டிகள் தமிழகத்திற்கு வந்து விட்டதால் இக்குழப்பம் “நேரிட்டதாக அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

பிறகு காஞ்சிபுரத்தில் கடந்த17 ஆம் தேதி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் பேசிய அவர், “விழுப்புரத்தில் வழங்கப்பட்ட விலையில்லா மிதிவண்டிகள் தரமானதுதான், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பரிசோதித்து சான்றளித்துள்ளனர்” எனக் கூறினார்.

ஆனால் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தனது மாவட்டத்தில் சொந்தப்பகுதியில் வழங்கப்பட்ட மிதிவண்டிகளில் குறைபாடுகள் இருந்ததால் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கும் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கான விளக்கமாக அமைச்சர் செங்கோட்டையன் காஞ்சிபுரத்தில் பூசிமொழுகினாலும் உண்மை அவர் பக்கம் இல்லை என்பதை படங்களை பார்த்தாலேதெரியும்.

மிதிவண்டிகளை ஓட்ட இயலாமல் தள்ளிச்செல்லும் மாணவியர், இரும்பு வீலா, தகரவீலா என சந்தேகம் எழுப்பும் வகையில் சேதமான வீல்கள், பல இடங்களில் துருப்பிடித்த நிலையிலான பாகங்கள் என மிதி வண்டிகளை பரிதாபமான நிலையில் மாணவ, மாணவியர் பெற்றுச் சென்றதை பலராலும் பார்க்க முடிந்தது.

மேலும் எப்பகுதியில் மிதிவண்டி வழங்கினாலும் அப்பகுதியில் உள்ள மிதிவண்டி பழுது பார்ப்போரிடம் பல நாட்கள் இம்மிதிவண்டிகள் பழுது நீக்க காத்துக்கிடக்கும் காட்சி அனைவரும் பார்த்து வருவதுதான். இதற்கு குறைந்தது ரூ. 500 செலவாகும். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதை எதில் சேர்ப்பது என யோசிக்க தோன்றுகிறது.