பசுவதை தொடர்பாக சமூக வலைத்தளங்கள் மூலம் தவறான தகவல்கள் பரப்பப்பட்டதால், ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்தது. மேலும் குழந்தை கடத்தல்காரர்கள் என்று வடமாநில இளைஞர்களை அடுத்து கொள்ளுதல், இதை கருத்தில் கொண்டு, சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும்வகையில் தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளில் திருத்தம் செய்ய மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இந்த வரைவு திருத்தங்களை இணையதளத்தில் வெளியிட்டு, ஜனவரி 15-ந்தேதிக்குள் பொதுமக்களின் கருத்தை கேட்கயுள்ளது. மத்திய அரசு. இந்த கருத்தின் அடிப்படையில், இறுதி முடிவு எடுக்க உள்ளது.
வரைவு திருத்தங்களின்படி, பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் ஆட்சேபகரமான, சட்ட விரோத, பொய்யான தகவல்களை அடையாளம் கண்டறிந்து செயலிழக்க செய்ய தொழில்நுட்ப கருவிகளை (டூல்) பயன்படுத்த வேண்டும். ஆட்சேபகரமான தகவல்களை பகிர வேண்டாம் என்று பயனாளர்களிடம் சமூக வலைத்தளங்கள் கேட்டுக்கொள்ள வேண்டும். 50 லட்சத்துக்கு மேற்பட்ட பயனாளர்களை கொண்ட சமூக வலைத்தளங்கள், இந்தியாவில் நிரந்தர அலுவலகத்தை திறக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.