இயேசுவின் பிறப்பை 650 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்த தீர்க்கதரிசி….

இயேசுவின் பிறப்பை 650 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்த தீர்க்கதரிசி….!

இந்த பிரபஞ்சம் தோன்றி எத்தனையோ கோடிக் கணக்கான ஆண்டுகள் ஆனாலும், கடவுளாகப் பிறந்தவர்களும், போற்றப் படுபவர்களும் ஒரு சிலர் மட்டும் தான்.

அவர்களில் முதன்மையானவர் இயேசு கிறிஸ்து!

இயேசு பிறப்பதற்கு, 650 ஆண்டுகளுக்கு முன்பாக, ஏசையா என்ற தீர்க்கதரிசிக்கு இயேசு காட்சி தந்தார். அந்தக் காட்சியைக் கண்டு, மெய் மறந்து போன ஏசையா, அந்த தேவனின் வருகையை, தன் காலத்திலேயே எழுதி வைத்திருந்தார்.

“நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்-

நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப் பட்டார்-

கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்,

அதிசய நாமம் அவர்,

ஆலோசனை கர்த்தா, வல்லமையுள்ள தேவன்,

நித்திய பிதா,

சமாதானப்பிரபு”

என்று எழுதி இருந்தார்.

அவர் எழுதி வைத்தபடியே, 650 ஆண்டுகள் கழித்து, தேவ துாதன் கன்னி மரியாளின் வயிற்றிலிருந்து பிறந்தார்.

அவர் பிறந்த போது, வானில் ஒரு அதிசயம் தென் பட்டது. ஆம், ஒரு நட்சத்திரம் தோன்றிது. அது பிரகாசமாய் தெரிந்தது.

அதனைக் கண்டவர்கள், ஆச்சர்யப் பட்டார்கள்.

அதைக் கண்ட வான சாஸ்திரிகள் அந்த நட்சத்திரத்தை நோக்கி, ஜெருசலேம் பயணமானார்கள்.

மக்கள் கணக்கெடுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் அது. யோசோப்பும், மரியாளும் அந்தப் பதிவிற்காக, தங்களது சொந்த ஊரான பெத்லகேமிற்குப் பயணம் ஆனார்கள்.

அந்த சமயம், மரியாளுக்கு பிரசவ நேரம் நெருங்கியது. அருகில் உள்ள சத்திரத்தில் இடம் கேட்டார்கள். ஆனால், அங்கு இடம் இல்லை. அதனால், அன்னை மரியாள், இயேசு பிரானை, மாட்டுக் கொட்டகையில் ஈன்றெடுத்தார்.

இந்த கிறிஸ்துமஸ் என்பது, சமாதான தேவ துாதனாகிய இறைவன், மக்களின் துன்பத்தைப் போக்க, இயேசு பிரானாக உருவெடுத்து நம்மைத் தேடி வந்த நாள்!