விமான நிலையத்தில் வந்திறங்கிய ஆபாச பட நடிகை திடீர் கைது!

பிரபல ஆபாச பட நடிகையான கத்ரீனா டான்ஃபோர்ட் கொலை முயற்சியில் ஈடுபட முயன்றதாக கூறி, விமானநிலையத்தில் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

ஆபாசபடநடிகையான Katrina Danforth(31). விடுமுறை காலத்தை கழிப்பதற்காக Hawaii-லிருந்து Washington திரும்பிய போது, அவர் Spokane சர்வதேச விமானநிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அவரை பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர் கைது செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் இவர் Idaho-வில் இருக்கும் RH என்ற நபரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

இதற்காக அவர் தன்னுடைய மொபைல் போனில் மூன்றுக்கு மேற்பட்ட நபர்களிடம் பேசியுள்ளதாகவும், ஒருவரிடம் மின்னஞ்சல் மூலம் பேசியுள்ளதும் பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த இவர் சம்பவ தினத்தன்று விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

அவரை இவர் ஏன் கொலை செய்ய வேண்டும்? என்ன காரணம் என்பது குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அந்த RH என்ற நபர் ஆணா? பெண்ணா? என்பது தெரியவில்லை, ஆனால் அவர் நலமாக இருப்பதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக அவரைப் பற்றிய எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. ஒரு ஆபாச பட நடிகை கொலை செய்யும் அளவிற்கு இறங்கியுள்ளதால், முக்கிய காரணம் ஏதோ ஒன்று இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.