மெக்சிகோ நாட்டில் உள்ள பியூப்லா மாநிலத்தின் கவர்னராக மார்த்தா எரிக்கா அலோன்சோ பணியாற்றி வருகிறார். இவரது கணவரின் பெயர் ரபேல் மொரினோ., இவர் அந்த மாநிலத்தில் முன்னாள் கவர்னராவர்.
கவர்னராக பணியாற்றி வரும் அலோன்சோ பழமைவாத தேசிய செயல் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவராவார். இவர் பியூப்லா மாநிலத்தின் கவர்னராக இந்த மாதம் 14 ம் தேதியன்று பதவியேற்றார்.
கணவன் – மனைவியான இவர்கள் இருவரும் நேற்று மாநிலத்தின் தலைநகுக்கு செல்வதற்காக ஹெலிகாப்டர் மூலம் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தனர். இவர்களின் திட்டப்படி நேற்று ஹெலிகாப்டரில் பயணம் செய்து கொண்டு இருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.
இதனை அறிந்த கட்டுப்பாட்டு அதிகாரிகள் உடனடியாக சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்கவே., சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளான இடத்திற்கு சென்று சோதனை செய்கையில் ஹெலிஹாப்டர் முற்றிலும் சேதமடைந்த நிலையில்., இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது.
இந்த விபத்தில் இருவரின் பிரேதங்களையும் மீட்ட மீட்பு படையினர் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவர்களின் இலலத்தில் வைத்துள்ளனர். இவர்களின் இறப்பிற்கு ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மனுவேல் லோபஸ் ஓப்ராடர் இரங்கல் தெரிவித்தார். மேலும்., விபத்து குறித்து விசாரணை செய்வதற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த ஹெலிகாப்டரை இயக்கிய விமானியின் நிலை தற்போது வரை என்ன ஆனது என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்., அந்த மாநிலத்தில் கவர்னராக பதவியேற்ற 10 நாட்களிலேயே கணவனும் – மனைவியும் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த மாநில மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.