நேற்று இணையத்தில் பட்டதாரி இளைஞர் ஒருவர், ”விவசாயி நேரடியாக தற்கொலை செய்துகொள்ளும் காட்சியை பாருங்கள்” என்ற தலைப்புடன் ஒரு காணொளி வைரலாக பரவியது.
கடந்த மாதம் 15 ஆம் தேதி தமிழகத்தின் நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களை கஜா புயல் தாக்கியது. இதன் காரணமாக பலர் தங்களது, வீடுகளை இழந்தனர். பல விவசாயிகள் தங்களின் விவசாயம் அழிந்த சோகத்தில் தற்கொலைக்கு முயன்றனர். தமிழக அரசு முடிந்தவரை நிவாரண பணிகளை துரித படுத்தியது.
இதில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு பகுதியை சேர்ந்த இராஜேந்திரன் என்பவரின் மகன் இனியவன். இவர் திமுகவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். இனியவன் தங்களது பகுதி கஜா புயலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், எங்களை தமிழக முதல்வர், தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் தனியார் தொலைக்காட்சி ஒன்றிக்கு ”ஐயா எடப்பாடி ஐயா” என்ற தலைப்பில் கொட்டும் மழையில் பேட்டி கொடுத்து இருந்தார்.
இந்நிலையில், இனியவன் நேற்று தனது முகநூலில் ஒரு காணொளி மூலம், ”எல்லாக்கும் வேதனையோடு ஒரு பதிவை போடுகிறேன். நான் பாய்சன் சாப்பிட்டுவிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களைவிட்டு பிரிந்துவிடுவேன். அப்படியொரு சூழ்நிலையை ஏற்படுத்திய தமிழக அரசுக்கு நன்றி. நாங்க என்னய்யா தப்பு செய்தோம். கஜா புயலில் எவ்வளவு கஷ்டப்பட்டோம். கூரை வீடு, மாடி வீடு வைத்திருந்த எல்லோரும் குளிரில் நின்றோம்.
காவல்துறை எங்கள் மீது பொய் வழக்கு போட்டு ரொம்ப கஷ்டப்படுத்துகிறார்கள். கஜா புயல் பற்றி டிவியில் வந்து பேட்டி எடுத்தார்கள். எடப்பாடி ஐயா என்று பேசினேன். அதற்க்கு என் மேல் வழக்கு, என் தந்தை மேல் வழக்கு போட்டு ஒரு கொலை குற்றவாளி போல் என்னை தேடுகின்றனர். எனக்கு நீதி கிடைக்கணும். எனது குடும்பத்திற்கு, என் ஊருக்கு நீதி கிடைக்கணும். எங்கள் மீது போடப்பட்ட வழுக்களை வாபஸ் பெற வேண்டும். இதுதான் என்னுடைய சாவின் கோரிக்கை” இன்று ஒரு காணொளிடயே பதிவிட்டுள்ளார்.
தற்கொலை செய்துகொண்ட இனியவன் தற்போது சிகிச்சை பெற்றுவருவதாக தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால், அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை.