ஃபேஸ் புக் காதலால், கல்லுாரி மாணவி செய்த கொடூரமான செயல்…!

திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த காக்களுர், ஆஞ்சநேயபுரம் 8-வது தெருவில் வசித்து வந்த, திருமுருகன் நாதன், பானுமதி தம்பதியரின் இளைய மகளின் பெயர் தேவிப்ரியா (வயது 19). இவர் தனியார் கல்லுாரி ஒன்றில் பி.காம் படித்து வருகிறார்.

இவருக்கும், கும்பகோணத்தை அடுத்த திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த விவேக் (வயது 18) என்பவருக்கும், ஃபேஸ் புக் வாயிலாக காதல் மலர்ந்தது. இந்தக் காதலுக்கு தேவிப்ரியாவின் தாய் பானுமதி எதிர்ப்பு தெரிவித்தார்.

தேவிப்ரியா, தன் காதலனை செல்போனில் தொடர்பு கொண்டு, தன்னை அழைத்துச் செல்லுமாறு சொன்னார். அதனை அடுத்து, விவேக், தனது நண்பர்களான சதீஸ் (வயது 18), விக்னேஷ் (வயது 18) ஆகியோரிடம், தன் காதலியை அழைத்து வருமாறு, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் அனுப்பி வைத்தார்.

அவர்கள், சென்னை வந்து, பின் புட்லுார் ரயில் நிலையம் வந்தனர். அவர்கள் தேவிப்ரியா அழைத்து வந்து, தன் வீட்டிற்கு வெளியே நிற்க வைத்து விட்டு, வீட்டிற்குள் சென்று, தன் துணிகளை எடுத்து பையில் வைத்துக் கொண்டிருந்தார்.

இதனைக் கண்ட, அவரது தாய் பானுமதி, தேவிப்ரியாவைத் தடுத்தார். இதில், ஆத்திரமடைந்த தேவிப்ரியா, வெளியே இருந்த காதலனின் நண்பர்களை அழைத்து, அவர்களுடன் சேர்ந்து, தன் வீட்டில் இருந்த கத்தியால், தன் தாயாரை சராமரியாகக் குத்தினார்.

பானுமதியின அலறல் கேட்டு ஓடி வந்த அககம் பக்கத்தினர், அவர்கள் மூவரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின், பானுமதியை, திருவள்ளுர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் அங்கு பரிதாபமாக உயிர் இழந்தார்.

ஃபேஸ் புக் காதலனுக்காக, தன் தாயாரைக் கொன்ற விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.