கடந்த வாரம் கட்சியின் விதிமுறைகளுக்கு மாறாக நடந்து கொண்டதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா-வை கட்சியில் இருந்து அதிமுக தலைமை நீக்கியது. இந்த விவகாரத்தில் தினகரன் பெயர் அடிபட்டது. அதாவது, தினகரன் அணியை சேர்ந்த 3 பேரிடம் ஓ.ராஜாவுக்கு தொடர்பு இருந்ததாக தலைமைக்கு வந்ததை அடுத்து, அவர் நீக்கப்பட்டு உள்ளார். ஆனால் அவர் நீக்கப்பட்ட 5 நாளில் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டது பல சந்தேகங்களை எழுப்பியது.
இந்நிலையில், ஓ ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அடுத்த நொடியே தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் ஓ ராஜா, எடபடிக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக, அவருக்கு நெருக்கமான சிலரிடம், தன்னிடமிருந்த ஒருசில ஆதாரங்களைக் காட்டி, என்னை கட்சியில் இருந்து நீக்க துடித்த ஆர்.பி. உதயக்குமார் மற்றும் எடப்பாடியின் சொத்து விவரங்கள் இது, இதனை திமுக தலைமையிடம் கொடுத்தால் என்ன ஆகுமென்று சிந்தித்து பாருங்கள். ஓபிஎஸ் எனக்கு அண்ணன் அவரை ஒன்னும் சொல்ல மாட்டேன்.
ஆனால், கடந்த 2 ஆண்டுகளில் அதிமுகவிலுள்ள அமைச்சர்கள் என்ன செய்தார்கள் என்பது பற்றிய முக்கிய என்னிடம் உள்ளது. இத்தனையும் நான் திமுகவிடம் கொடுத்தால், சசிகலாவுடன் ஊழல் குற்றவாளியாக எல்லோரும் செல்ல வேண்டியது தான்” என்று தூது அனுப்பும் படி பேசியுள்ளார்.
ஏற்கனவே பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு இது மேலும் தலைவலியை உண்டாக்கியது. இதனையடுத்து ஓ ராஜாவை மறுபடியும் கட்சிக்குள் சேர்க்க இபிஎஸ், ஓபிஎஸ்ஸும் சம்மதித்து உள்ளனர். தற்போது இவருக்கு தமிழ்நாடு கூட்டுறவு, பால்வள சேர்மன் பதவி வழங்கவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது