குடும்பத்தினருடன் வெளிநாட்டிற்கு பறந்த ஜனாதிபதி மைத்திரி..!!

தனிப்பட்ட பயணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.வருட இறுதி விடுமுறையை கழிப்பதற்காக தனது குடும்பத்தாருடன் தாய்லாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் அங்கு ஒருவார காலத்திற்கு தங்கியிருப்பார் எனவும் கூறப்படுகிறது.

நாட்டில் முழுமையான அமைச்சரவை ஒன்று உருவாக்கப்படாத நிலையில், ஜனாதிபதி அவர்கள் வெளிநாடு சென்றிருப்பது அமைச்சரவை நியமனங்களில் மேலும் இழுபறிநிலையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் அமைச்சரவை தொடர்பான சிக்கல் நீடித்துக் கொண்டிருப்பதுடன், இதுவரை அமைச்சர்களுக்கான கூட்டமும் இன்னமும் நடைபெறவில்லை.இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டுக்கான பயணத்தினை மேற்கொண்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதியின் தனப்பட்ட பயணம் இது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய அமைச்சரவையில் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களில் அடங்கும் பொறுப்புக்கள் உள்ளடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதில் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை இன்று (24) வெளியிட எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அதனை வெளியிடாது ஜனாதிபதி வெளிநாடு சென்றுள்ளமையானது மேலும் தாமதங்களை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.ஜனவரி 2ம் திகதியளவிலேயே தனது பயணத்தை நிறைவு செய்து ஜனாதிபதி நாடுதிரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.