கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு 14 வயது நிரம்பிய மகளும், 17 வயது மகனும் உள்ளனர். திடீரென அவர்களின் மகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சிறுமையை அவரது பெற்றோர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 8 மாத கர்ப்பமாக கூறியுள்ளனர். இதனையடுத்து மருத்துவமனையிலிருந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்தநிலையில் சிறுமியை கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளிக்காத நிலையில், குழந்தைகள் பாதுகாப்பு மையத்தினர் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியின் உடன் பிறந்த சகோதரர்தான் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் சிறுமியின் சகோதரனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை தேடிவருகின்றனர்.