அசால்டாக நடக்கும் கைமாறல்..? அதிரடியாக வெளியான அண்டர் கிரவுண்ட் ஆபரேசன்.!

தாராபுரத்தில் காவல்துறையினர் வாகன சோதனையில் ரூ.1 கோடி பழைய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. நோட்டு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும், 2 பேரும் கைது செய்யப்பட்டனர்

திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், தாராபுரம் ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்தகாரை நிறுத்த முயன்றனர். ஆனால் காரை நிற்தாமல்சோதனை சாவடியை தாண்டிவேகமாக சென்றனர். இதையடுத்து காவல்துறையினர் துரத்தி பிடித்து வாகனத்தை சோதனை செய்தனர்.

அப்போது காரில் பழைய ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரிய வந்தன. இதையடுத்து காரில் வந்த 2 பேரையும் கைது செய்துதாராபுரம் காவல்நிலையம்அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் காரில் வந்தவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் பிரதீஸ்ராஜ் , சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் கலைச்செல்வன் என்பது தெரியவந்தது.

இவர்கள் இருவரும் கோவை ஆவாரம்பாளையத்தில் தங்கி இருந்து தனியார் தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்தனர். நண்பர்களான இருவரும் வார விடுமுறைநாட்களில் அங்குள்ள சிவன் கோயிலுக்கு சென்றபோது கோவை, காந்திபுரம், கிராஸ்கட் ரோட்டை சேர்ந்த கேஸ் ஏஜென்சி உரிமையாளர் தண்டபாணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தண்டபாணி தன்னிடம் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் ரூ.1 கோடி அளவிற்கு உள்ளதாகவும் அதை தற்போதையபுழக்கத்தில் உள்ள புதிய நோட்டுகளாக மாற்றி தரவேண்டும் என கேட்டார்.

இதையடுத்து மதுரையில் புரோக்கர் உள்ளதாகவும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி தருவதாகவும், அதற்கு கமிஷனாகரூ.1 லட்சம் தரவேண்டும் எனக்கூறியுள்ளனர்.

இதைஏற்றுக்கொண்ட தண்டபாணி ரூ.1 கோடி பழைய ரூபாய்நோட்டுகளை இருவரிடமும்கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்டு மதுரைக்கு சென்றுள்ளனர். ஆனால் புரோக்கரை தொடர்பு கொண்ட போது புரோக்கரின் செல்போனை அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து இருவரும் கோவையை நோக்கி வந்தனர். அப்போது தாராபுரம் ஒட்டன்சத்திரம் சோதனைசாவடி வாகன தணிக்கையில் சிக்கி கொண்டனர். இதில்காவல்துறையினர் இருவரையும் துரத்தி பிடித்தபோது கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பழையநோட்டுகளில் ரூ.500 நோட்டுகள் ரூ.55 லட்சத்திற்கும், ரூ.1000 நோட்டுகள் ரூ. 45 லட்சத்திற்கும்இருந்தது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல்செய்யப்பட்டது.

இதையடுத்து, தண்டபாணி வைத்திருந்தது கருப்பு பணம் என்பதால் கோவையில் இருந்து வருமானவரித்துறையினர் தாராபுரம் காவல்நிலையத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.

தண்டபாணியின் வீடு மற்றும்அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். உரிமையாளர் தண்டபாணி தலைமறைவாகியுள்ளார்.