முகத்தை பொலிவாக்க தேவையில்லாமல் பணம் வீணாக்காதீர்கள்!. இலவசமாக கிடைக்கும் இந்த இலையை பயன்படுத்துங்கள் போதும்!.

இன்றைய வாழ்கை முறையில் ஆண்களும் சரி, பெண்களும் சரி தன் முகத்தை எப்படி அழகாக வைத்துக்கொள்வது என்று தான் இணையத்தில் தேடுகின்றனர். மேலும்,
விலை உயர்ந்த அழகு சாதனங்கள் போன்றவற்றை அதிக அளவில் பணம் செலவழித்து வாங்கி பயன்படுத்துகின்றனர்.

ஆனால் இயற்கை முறையில் சருமத்தை எளிய முறையில் பொலிவடைய செய்யலாம். ஆம்.. உங்கள் வீட்டில் கொய்யா மரம் இருந்தால் போதும் நீங்களும் அழகாக ஜொலிக்கலாம். கொய்யா இலை உங்கள் சருமத்தில் பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும் மருந்தாகும். கொய்யா இலையை அரைத்து சரும பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் பூசினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்..

கொய்யா இலையை மிக்சியில் அரைத்து, அதனுடன் சிறுது தயிர் சேர்த்து முகத்தில் பூசி, அவை நன்கு உலர்ந்த பின் முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இதனை தினமும் நீங்கள் தூங்க செல்லும் முன் செய்துவந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

வெயில் காலங்களில் முகம் கருமை நிறத்திற்கு மாறத்தொடங்கும். இதற்கு கொய்யா இலையை பயன்படுத்தி சோர்வாக இருக்கும் உங்கள் முகத்தை ஜொலிக்க வைக்க முடியும். கொய்யா இலையை அரைத்து அதில் சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து பயன்படுத்தினால் அது முக துவாரங்களில் உள்ள அழுக்கை நீக்கி முகத்தை பளபளப்பாகும்.

கொய்யா இலைகளை அரைத்து அந்த நீரின் மூலம் முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் முகப்பரு பிரச்சனை நீங்கும். உங்கள் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கி இளமை நீடிக்கும்.

பொடுகு பிரச்சனையால் பாதிக்கப்படாதவர்கள் கண்டிப்பா யாரும் இருக்க முடியாது, கொய்யா இலையை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை தலையில் தேய்த்து குளித்து வரலாம். இதன் மூலம் முடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். உங்கள் பொடுகு காணாமல் போகும்.