கண் பார்வையை இழந்த பிக்பாஸ் காஜல், வெளியான அதிரவைக்கும் காரணம்!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை காஜல் பசுபதி. மேலும் இவர் பிரபல தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களிடையே மேலும் பிரபலமானார்.இதனை தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

அதைத்தொடர்ந்து அவர் சில படங்களில் மட்டும் நடித்து வந்தார். மேலும் சமீபத்தில் இறுதியாக கலகலப்பு 2 படத்தில் நடித்திருந்தார்.

மேலும் நடிகை காஜல் பசுபதி சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் பிஸியாக இருக்கக்கூடியவர். ஆனால், கடந்த சில காலமாக சமூக வலைதளத்தில் எந்த வித பதிவையும் வெளியிடாமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் காஜல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுளளார். அதில் செல்போனில் அதிகம் கேம் விளையாடியதால், கொஞ்சம் கண் பார்வையையும் இழந்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.

மேலும், சிறிது காலத்திற்கு செல்போனை அதிகம் பயன்படுத்தக்கூடாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும் காஜல் தெரிவித்துள்ளார்.