இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரரான விரேந்திர சேவாக் பற்றிக் கேட்டால்,அவர் அதிரடி வீரர் என்று தான் பதில் வரும்.
அந்தப் பதில் உண்மையானது என்றாலும்,அவரது குணம் சற்று வித்தியாசமானது.கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தவரை பேட்டிங் செய்யும் தொடக்க வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சை ஆய்வு செய்ய முதல் 2 ஓவர்களை வீணடித்து பந்து மற்றும் மைதானத்தின் தன்மையை கண்காணிப்பது வழக்கம்.
ஆனால் சேவாக் அப்படியில்லை.முதல் பந்து எப்படி வந்தாலும் அந்தப் பந்து எப்படி எல்லைக் கோட்டிற்கு அனுப்புவது என்ற ஆக்ரோஷமான மனநிலையைக் கொண்டவர்.
பந்துவீசும் எதிரணி வீரர் யார் என்று பெரும்பாலும் சேவாக் கண்டுகொள்வதில்லை.பந்து எங்கே எகிறுகிறது என்பதை மட்டுமே அதிகம் நோட்டம் விடுவார்.
சேவாக் ஆட்டத்தின் முதல் 4 ஓவர்களில் பெவிலியன் சென்றால் மட்டுமே எதிரணிக்கு அன்று நல்ல காலம்.
8 ஓவருக்கு மேல் சேவாக் களத்தில் நின்றால் அன்று தீபாவளி இல்லாமலே வானவேடிக்கை நிகழும்.இத்தகைய சிறப்பு வாய்ந்த வீரரை இந்திய கிரிக்கெட் அணி பெறுவது சிரமமான விஷயம் தான்.