நாட்டில் உள்ள மக்களுக்கு ஏதேனும் அவசர தேவைகளில் உடனடியாக வந்து உதவி செய்வதில் அவசர ஊர்திக்கு இருக்கும் பங்கானது அளப்பரியது. அந்த வகையில் பலரின் உயிரை காக்க அதிவேகத்தில் பறக்கும் அவசர ஊர்திகள் திடீரென விபத்தில் சிக்குவதும் தொடர்கதையாகியுள்ளது.
மியான்மர் நாட்டில் இருக்கும் மண்டாலே ப்ரதியதில் இருக்கும் யாங்கூன்-மன்டாலே நகரின் பிரதான சாலையில் அவசர ஊர்தியொன்று அதிவேகத்தில் சென்று கொண்டு இருந்தது. இந்த அவசர ஊர்தியானது வேகமாக செல்லும் போது வாகனத்தின் டயரானது திடீரென வெடித்தது.
வேகமாக சென்று கொண்டு இருந்த வாகனத்தின் டயரானது தீடீரென வெடித்ததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அங்கிருந்த வாகன நிறுத்தத்தில் சென்று அங்கிருந்த மக்களின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் வாகனத்தின் ஓட்டுநர் உட்பட அங்கிருந்த பொதுமக்கள் மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்., காயமடைந்த இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.