மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டியை அடுத்துள்ள பகுதி அய்யங்கோட்டை., இந்த ஊரில் உள்ள அய்யனார் தெருவை சார்ந்தவர் முருகன் (52). இவரது மனைவியின் பெயர் பாலாமணி (37). இவர்கள் இருவருக்கும் திவ்யா என்கிற மகளும்., வீரகுரு என்ற என்கிற உள்ளனர்.
முருகன் வாடிபட்டியில் இருக்கும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அருகில் இளநீர் வியாபாரம் செய்து வரும் நிலையில்., முருகனுக்கும் அவரது மனைவி பாலாமணிக்கும் இடையே குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில்., இன்று காலை இவர்களுக்குள் வழக்கம் போல குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது.
இவர்கள இருவருக்கும் இடையே நடைபெற்ற கடுமையான வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த முருகன் மனைவியை தாக்கியும் ஆத்திரம் அடங்காததால்., அங்கிருந்த கல்லை பாலாமணியின் தலையில் போட்டு கொலை செய்துள்ளார்.
கோபத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு பின்னர் சிறிது நேரம் கழித்து சுதாரித்த முருகன்., மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்., சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.