இந்தியாவில் மனைவியை பாறாங்கல்லால் அடித்து கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள சிகதர்பி கிராமத்தை சேர்ந்தவர் பாதநாயகா. இவர் மனைவி ஷில்பா (26). தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் ஷில்பாவின் நடத்தையில் பாதநாயகாவுக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அடிக்கடி மனைவியுடன் சண்டை போட்டுள்ளார்.
இதையடுத்து இரு தினங்களுக்கு முன்னர் இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டது. பின்னர் ஷில்பா தனது கணவரை அழைத்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றார்.
அங்கு ஷில்பா தூங்கி கொண்டிருந்த போது அவர் மீதிருந்த ஆத்திரத்தில் பாதநாயகா பெரிய பாறாங்கல்லை எடுத்து தலையில் போட்டார்.
பின்னர் அவர் தப்பியோடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஷில்பாவை அவர் பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பாதநாயகாவை பிடித்தனர்.
ஆனால் கைது செய்யப்பட்ட சில மணி நேரத்தில் அவர் பொலிஸ் பிடியில் இருந்து தப்பினார்.
இதையடுத்து அவரை பிடிக்க பொலிசார் தனிப்படை அமைத்துள்ளனர்.