ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட விஜயமாக தாய்லாந்துக்கு சென்றுள்ளார். இது குறித்து சிங்கள ஊடகங்கள் பல்வேறு விதமாக செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த இரண்டு மாதங்களாக இலங்கையில் நிலவிய அரசியல் குழப்ப நிலைகள் காரணமாக மைத்திரி மிகவும் அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளதாக தெரிய வருகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து மேற்கொண்ட அரசியல் புரட்சி படுதோல்வியில் முடிவடைந்துள்ளது.
புரட்சியின் பிரதான நபரான மைத்திரிக்கு உள்நாட்டுக்கு அப்பால் சர்வதேச ரீதியாக பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் நாட்டில் அமைதியான நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், மன அமைதி தேடி மைத்திரி தாய்லாந்துக்கு சென்றுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களில் மைத்திரியின் செயற்பாடுகள் குறித்து பல்வேறு விதமாக பேசப்பட்டன. கடும் அழுத்தம் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவராக ஜனாதிபதி செயற்படுவதாக பலராலும் குற்றம் சாட்டப்பட்டது.
ஜனாதிபதிக்கு மைத்திரிக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும் என பெண்ணொருவர் உயர் நீதிமன்றில் மனு ஒன்றும் தொடுத்திருந்தார்.
இவ்வாறான நிலையில் தாய்லாந்தில் மனநிலை ரீதியான சிகிச்சை பெற்றுக்கொள்ளவே மைத்திரி சென்றுள்ளதாக சிங்கள ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
கடந்த 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்த மஹிந்த ராஜபக்ஷ தீவிர மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
அதன்போது தாய்லாந்தின் பாங்கொக் நகருக்கு அடிக்கடி செல்லும் மஹிந்த, அங்கு சிகிச்சை பெற்றிருந்தார் என்பது பலரும் அறிந்ததே.