தமிழகத்தில் நண்பரின் மனைவிக்கு மயக்க மாத்திரை கொடுத்து துஷ்பிரோகம் செய்து கர்ப்பமாக்கிய நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரை சேர்ந்தவர் சிலம்பரன் (22). இவருக்கு ஷர்மிளா என்ற மனைவியும் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் சிலம்பரனின் நண்பரின் மனைவி அவர் வீட்டுக்கு சில மாதங்களுக்கு முன்னர் வந்துள்ளார். அப்போது ஷர்மிளா வீட்டில் இல்லாத நிலையில் சிலம்பரன் மட்டுமே இருந்துள்ளார்.
இதையடுத்து பழச்சாறில் மயக்கமருந்து கலந்து நண்பரின் மனைவிக்கு சிலம்பரன் கொடுத்தார். பின்னர் அவரை துஷ்பிரயோகம் செய்ததோடு அதை வீடியோவும் எடுத்தார்.
இதன்பின்னர் அந்த வீடியோவை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டியே அந்த பெண்ணை துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார் சிலம்பரன்.
இதன் காரணமாக அவர் கர்ப்பமானார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அப்பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
இது குறித்து பொலிசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் பொலிசார் சிலம்பரனை கைது செய்துள்ளனர்.