பல பிரச்சினைகளுக்கு நடுவே அடுத்த போஸ்டரை வெளியிட்ட மஹா படக்குழு!

ஹன்சிகா தற்போது விக்ரம் பிரபுடன் “மஹா” என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யு.ஆர்.ஜமீல் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

எக்ஸட்ரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் ஒரு போஸ்டரில் சாமியார் வேடத்தில் புகைப்பிடிப்பது போன்று ஹன்சிகா உள்ளார். அதேபோல் மற்றொரு போஸ்டரில் ஹன்சிகா கையில் பல்வேறு முகமூடிகளை வைத்திருப்பது போன்று போஸ்ட்டரில் உள்ளது.

இந்த போஸ்டருக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. காவி உடை அணிந்து புகைப்பிடிக்கும் நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில், படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரின் பின்னணியில் மசூதி ஒன்று இருக்கிறது. அதில் ஹன்சிகா தொழுவது போலவும், பின்னால் நிழல் உருவத்தில் துப்பாக்கியுடன் இருப்பது போன்றும் காட்சி உள்ளது.