கிளிநொச்சி – இரணைமடுக் குளத்தின் வான்பகுதிக்குள் அதிகளவு மீன்கள் பிடிபடுவதனால் இன்று பலர் மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெருமளவானவர்கள் வான்பகுதிக்குள் மீன் பிடியில் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.நூற்றுக்கணக்கான கிலோ மீன்கள் பிடிப்படுவதனால் வியாபாரிகளும் இரணைமடுவில் குவிந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
நேற்று மாத்திரம் பல இலட்ச ரூபாவுக்கு மீன்கள் விற்பனை இடம்பெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, தொடர்ந்தும் வான்பகுதிக்குள் பலர் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதோடு அவற்றை கொள்வனவு செய்வதற்கு மக்களும் வியாபாரிகள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.