9 வயது சிறுவன்., 62 வயது பாட்டி.!! முன்னோர்கள் கூறியதை தட்டாமல் செய்த சிறுவன்.!!

மனிதனாக பிறந்த அனைவருக்கும் திருமணம் என்ற பந்தத்தின் மூலமாக அவர்களின் சந்ததிகளை உருவாக்குவதற்காக திருமணம் செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில் பலர் அவர்களது வாழ்க்கையின் முக்கிய அங்கமான திருமணத்தை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போலவே., நடத்துவார்கள்.

அந்த வகையில்., தென்னாபிரிக்க நாட்டில் உள்ள 9 வயது சிறுவன் 62 வயதுடைய மூதாட்டியை திருமணம் செய்தது பெரும் அதிர்ச்சியையும்., ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த 9 வயதுடைய சிறுவனின் கனவில் வந்த முன்னோர்கள் அந்த மூதாட்டியை திருமணம் செய்துகொள்ளுமாறும்., திருமணம் செய்யாவிடில் அவர்களின் குடும்பத்திற்கு அதிகளவில் தீங்கு ஏற்படும் என்றும் தெரிவித்ததாக தெரிவித்துள்ளார்.

இதனை கேட்ட பெற்றோர் தங்களது முன்னோர்கள் மகனின் கனவில் வந்து தெரிவித்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த நாங்கள்., அவனுக்கு திருமணம் முடித்து வைக்க ஏற்பாடு செய்திருந்தோம்.., அதன் படி திருமணமும் நடைபெற்று முடிந்தது என்று தெரிவித்தனர்.

இது குறித்து 9 வயதுடைய சிறுவன் ஹெலன் கூறுகையில்., 62 வயதுடைய சலீனியை திருமணம் செய்து கொணட்து மகிழ்ச்சி., இந்த திருமணத்தை எனது முன்னோர்களின் ஆசைப்படியே நான் செய்தேன்., பெரியவனாக வளர்ந்து வந்தவுடன் எனது வயதிற்கு ஏற்றாற்போல் உள்ள பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் என்று தெரிவித்தார்.