ஹட்டன் – காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு அருகில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் பிரித்தானிய பெண்ணொருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
28 வயதுடைய குறித்த யுவதி மற்றும் அவரின் காதலன் தங்கியிருந்த அறைக்கு அருகில் சந்தேகநபர்களான இருவரும் தங்கியிருந்துள்ளனர். பின்னர் குறித்த இருவரும் நேற்றைய தினம் மதுபானம் அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகாலை பிரித்தானிய ஜோடி தங்கியிருந்த அறைக்கு வந்த சந்தேகநபர்கள் அறையில் இருந்து அவர்களை வெளியே வருமாறு அழைத்துள்ளனர்.
அதனை தொடர்ந்து, சந்தேகநபர்கள் குறித்த யுவதியை பலாத்காரம் செய்ய முற்பட்டதை தொடர்ந்து, காதலன் சம்பவம் தொடர்பில் விடுதி முகாமையாளளுக்கு அறிவித்துள்ளார்.
பின்னர், சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் டிக்கோயா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.