நடுக்காட்டில் கொழுந்தியாளுடன் கணவன்.!! நடுவில் வந்த மனைவி….

கரூர் மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடியை அடுத்துள்ள செம்மங்கோன்பட்டியை சார்ந்தவர் கண்ணன். இவரது மகனை பெயர் அன்பரசன் (23). திண்டுக்கல் அருகேயுள்ள சென்னமநாயக்கன்பட்டியை சார்ந்தவர் கிருஷ்ணமூர்த்தியின் மகள்.

இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது. கரூரில் உள்ள வட்டி கடையில் பணியாற்றி வந்த அன்பரசன்., அந்த வேலை சரிவராத காரணத்தால் வேலையை விட்டுவிட்டார்.

பின்னர் அங்கேயே கிடைத்த ஓட்டுநர் வேலையை பார்த்து வந்த அன்பரசன் தனது மாமனாரின் இல்லத்திலேயே இருந்து வந்துள்ளார். அந்த சமயத்தில் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்த அவரது மனைவியின் தங்கை மீது அன்பரசன் தனது பார்வையை காட்டியுள்ளார்.

தனது கனவை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் மனைவியின் தங்கையிடம் ஆசைவார்த்தை கூறி பழகி வந்துள்ளார். இந்நிலையில்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மனைவியின் தங்கையை கடத்தி சென்ற அன்பரசன் உல்லாசம் அனுபவித்துள்ளார்.

இதனை அறிந்த அன்பரசனின் மனைவி சம்பவம் குறித்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அந்த விசாரணையில் இவர்கள் இருவரும் மதுரை மாவட்டத்தில் உள்ள கப்பலூர் பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அன்பரசனை அதிரடியாக கைது செய்தனர். மனைவி உயிருடன் இருக்கும் போதே மைத்துனிக்கு ஆசைப்பட்ட சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.