மகள், மனைவியைத் துன்புறுத்திய ஆலயப் பூசகர் பொலிஸாரால் அதிரடிக் கைது….!!

யாழ்.பருத்தித்துறையில் தனது மனைவியையும், மகளையும் துன்புறுத்திய குற்றச்சாட்டில் 38 வயதான ஆலயப் பூசகரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேகநபர் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.இதன்போது எதிர்வரும் ஜனவரி-03 ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறைப் பதில் நீதவான் பா.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.