தென் ஆப்பிரிக்கைவை சேர்ந்தவர் முசா மான் சினி எனும் இளைஞர். இவர் ஓரு கித்தார் வாசிக்கும் இசைக்கலைஞர். இவருக்கு பல்வேறு காரணங்களினால் மூளையில் புற்றுநோய் இருந்துள்ளது. இந்த புற்று நோயிற்காக அறுவை சிகிச்சை செய்ய எண்ணி டர்பன் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
அந்த மருத்துவமனையில் இவருக்கு அறுவை சிகிச்சையும் நடந்துள்ளது. அப்போது, டாக்டர்களிடம் நான் கித்தார் வாசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ள டாக்டர்களும் சம்மதித்துள்ளனர்.
அதன்படி முசா கித்தார் வாசிக்க மருத்துவர்கள் அவரது மண்டை ஓட்டை பிளந்து சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். முசா எந்தவித சலனமும் இன்றி வாசித்து கொண்டிருக்க மருத்துவர்கள் அவரது மூளையில் உள்ள புற்று நோய் கட்டியை அகற்றி கொண்டிருந்தனர்.
முசாவின் மென்மையான இசையை கேட்டபடியே மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை வெற்றி கரமாக முடித்துள்ளனர். தற்பொழுது முசா நலமாக உள்ளார். முசாவின் அறுவை சிகிச்சை பற்றிய பயம், அவரை கித்தார் வாசிக்க தூண்டியிருக்கலாம் என கூறப்படுகிறது.